அசுரனுக்கு பின் முக ஸ்டாலின் பார்த்த திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (14:59 IST)
அசுரனுக்கு பின் முக ஸ்டாலின் பார்த்த திரைப்படம்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்து தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவுசெய்தார். இந்த கருத்து பெரும் பிரச்சினைக்கு உள்ளாகி திமுகவின் முரசொலி நாளிதழ் கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டியது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அசுரன் படத்திற்கு பின்னர் முக ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கு ஒன்றில் ஜீவா நடித்த ஜிப்ஸி என்ற திரைப்படத்தை பார்த்தார். எழுத்தாளரும் இயக்குனருமான ராஜமுருகன் இயக்கிய இந்த திரைப்படம் சென்சாரில் சிக்கி அதன்பின்னர் டிரிபியூனல் சென்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
திண்டுக்கல் பெரியசாமி, துரைமுருகன், எ.வவேலு உள்பட தனது கட்சிக்காரர்கள் உடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த படத்தை இன்று பார்த்துள்ளார். இந்த படம் குறித்து அவர் தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்