’அசுரன்’ படம் பார்த்து பாராட்டிய முக ஸ்டாலின்

வியாழன், 17 அக்டோபர் 2019 (08:13 IST)
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் மீது சக்கை போடு போட்டு வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனுஷின் கடந்த சில படங்கள் சுமாரான வசூலையே கொடுத்த நிலையில் ’அசுரன்’படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் ’அசுரன்’படத்தை திரையுலக பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் பார்த்து பாராட்டி வருகிறார் 
 
அந்த வகையில் நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் கூறியதாவது: அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.  முக ஸ்டாலின் அவர்களின் இந்த பாராட்டால் தனுஷ் உள்பட படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்