தளபதி 68 படத்தில் இந்த வெள்ளிவிழா நாயகனா? லேட்டஸ்ட் அப்டேட்!

திங்கள், 2 அக்டோபர் 2023 (11:34 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடக்கும் எனவும் நாளை முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் மைக் மோகன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் வாரிசு படத்திலும் அவரை நடிக்க அழைத்து அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது விஜய் 68 படத்தில் அவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்