எம்ஜிஆர் ரசிகர்கள் விஜய் படத்தின் பெயரை அனுமதிப்பார்களா...?

சனி, 27 ஆகஸ்ட் 2016 (17:02 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும், விஜய் 60 படத்தின் பெயர் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. எங்க வீட்டுப் பிள்ளைதான் அனைவரது தேர்வும்.


 


ஆனால், எங்க வீட்டுப் பிள்ளை என்றால் அது எம்ஜிஆர்தான். விஜய் படத்துக்கு அந்தப் பெயரை வைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று எம்ஜிஆர் பக்தர்கள் கட்டையை போட்டனர். 
 
அதனால் படத்தின் பெயரை உங்க வீட்டுப் பிள்ளை என்றோ, நம்ம வீட்டுப் பிள்ளை என்றோ சற்று மாற்றி வைக்கலாமா என்று படயூனிட் யோசித்து வருகிறது. அதேநேரம் புதிய பெயர்களையும் பரிசீலித்து வருகின்றனர். 
 
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை விரைவில் முடித்து 2017 பொங்கலுக்கு வெளியிட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்