இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நிலை: மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (19:04 IST)
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தான் நலமாக இருப்பதாகவும் கூறி வெளியிட்ட அறிக்கை  சற்றுமுன் வெளியானது.
 
இந்த நிலையில் பாரதிராஜா சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை அவரது உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 
மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்கள் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் மேலும் அவருக்கு எந்தவிதமான உயர்தர சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்தும் கீழ்கண்ட மருத்துவர்கள் பாரதிராஜாவுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரிப்பார்.
 
இரண்டு மணி நேர மருத்துவ ஆலோசனை செய்யப்பட்டன. டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழக நிறுவனர் ஏசி சண்முகம் அவர்கள் மருத்துவ சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தியதுடன்,  பாரதிராஜா அவர்களுக்கு மேல் சிகிச்சை ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார். மேலும் பாரதிராஜா அவர்களின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் சீராக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்