மெர்சலுக்கு சான்றிதழ் ஓகே; இதை நீக்கியது ஏமாற்றம்

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (10:14 IST)
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பிரமாண்டமாக நாளை வெளியாகவுள்ளது. இப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மெர்சல் படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா கிராபிக்ஸ் என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரம் ஏதும் படக்குழுவினரால் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டது. இதனால் அந்த வாரியம் தடையில்லா சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட் தான் உள்ளது,  இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குகள் நல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ்  வழங்கிவிட்டது. ஆனால், படத்தில் இரண்டு காட்சிகளை கட் செய்துள்ளார்களாம். எது எப்படியோ படம் வந்தால் போதும் என்று,  விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 
நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மெர்சல்'. இந்த  படத்தை ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்