மீனாட்சி தீட்ஷித்... எங்கேயும் போகலை இங்கேதான் இருக்கிறாராம்

சனி, 6 பிப்ரவரி 2016 (13:14 IST)
தெனாலிராமன் படத்தில் எதை ரசித்தார்களோ இல்லையோ. வடிவேலு ஜோடியாக நடித்த மீனாட்சி தீட்ஷித்தை மட்டும் குளிர குளிர ரசித்திருப்பார்கள்.


 


அந்த வடநாட்டு குல்பி எங்கே என்று வருந்தி உருகியவர்களுக்கு ஒரே வரப்பிரசாத செய்தி....
அவர் எங்கேயும் போகவில்லை சென்னையில்தான் இருக்கிறார்.
 
மீனாட்சி நடித்த, பயம் ஒரு பயணம் என்ற ஹாரர் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. "இது தவிர ஒரு கன்னடப் படம், ஒரு இந்திப் படத்தில் நடித்திருக்கிறேன். இந்திப் படத்தின் நாயகன் ரந்தீப் ஹுடா" என்றார். எனில் நாயகி நீங்களா என்று கேட்கவில்லை (நாயகியாக இருந்தால் அவரே சொல்லியிருப்பாரே).
 
பயம் ஒரு பயணம் தவிர்த்து இன்னும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதாவது சென்னையையும், தமிழ் ரசிகர்களையும் தவிக்கவிட்டு மீனாட்சி எங்கேயும் போக மாட்டாராம். 
 
எங்கப்பா அந்த வெல்கம் போர்ட்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்