சின்னத்திரை தொடரில் கதாநாயகனாக அறிமுகமாகும் மயில்சாமியின் மகன்!

vinoth
சனி, 20 ஜனவரி 2024 (10:13 IST)
தமிழ் சினிமாவின் பெயர்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அதிகாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சாலிகிராமத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போது, பொதுமக்களும் திரையுலகினரும் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இப்போது மயில்சாமியின் மகன் யுவன் சின்னத்திரை தொடரில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஜய் தொலைக்காட்சியில் வரும் 22-ம் தேதி முதல் தங்கமகள் என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அதில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் தலைவாசல் விஜய், வினோதினி, காயத்ரி ஜெயராம், நீபா உட்பட பலர் நடிக்கின்றனர். அஸ்விதா ஆனந்திதா நாயகியாக நடிக்கிறார். இந்த தொடரை ஹரிஷ் ஆதித்யா இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்