ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடங்கலுக்கு பிறகு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்த ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நன்றி நெய்வேலி என குறிப்பிட்டு செல்பி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.