மக்களின் அச்சத்தை போக்கும் ‘மாஸ்டர்’: திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு

திங்கள், 1 ஜூன் 2020 (17:34 IST)
லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திரையரங்கு திறந்தவுடன் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டால் மட்டுமே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பயமில்லாமல் வருவார்கள் என்றும் அதன் பின்னர் திரையரங்குகளில் மற்ற படத்தை திரையிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் முதலில் திரையிடப்படும் திரைப்படமாக அனேகமாக விஜய்யின் ’மாஸ்டர்’ படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் படத்தைப் பார்க்க பயம் இன்றி திரையரங்குகளுக்கு வருவார்கள் என்றும் அதனை அடுத்து மக்களுக்கு தியேட்டர்களுக்கு செல்ல பயம் இருக்காது என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர் 
 
இந்த நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் திரையிடுவதற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.   திரையரங்குகள் திறக்கும் முன்னரே சென்சார் சான்றிதழ் வாங்கி திரையரங்குகள் திறந்தவுடன் உடனடியாக இந்த படம் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பட்ஜெட்டை விட அதிக விலைக்கு ஓடிடியினர் மாஸ்டர் திரைப்படத்தை கேட்டதாகவும் ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் திரையரங்குகளில் தான் தனது படம் வெளியிட வேண்டும் என விஜய் கறாராக கூறி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்