மாசுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி இல்லை

வெள்ளி, 29 மே 2015 (09:53 IST)
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நள்ளிரவில், அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் நடைபெறும். ஐ, லிங்கா, என்னை அறிந்தால் படங்களுக்குக்கூட இந்த சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டன.
ஆனால், மாசு என்கிற மாசிலாமணிக்கு இந்த நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குப் பிறகே காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
 
அப்படியே, அதிக காசுக்கு டிக்கெட்டை விற்கக் கூடாது என்று தடைவிதித்து கண்காணித்தால் சிறப்பாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்