தெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்தோட வரி பாஸ்...

செவ்வாய், 27 ஜனவரி 2015 (12:39 IST)
தெறிக்குது பறக்குது என்றுதான் படத்தை அறிமுகப்படுத்துவார்கள். பலநேரம் அது அஞ்சான் மாதிரி பார்ப்பவர்களுக்கு ஹேங்ஓவர் உண்டாக்கிவிடும்.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் மாஸ் படத்தின் விளம்பரத்துக்கும் பில்டப்புக்கும் குறைவில்லை. மதன் கார்க்கி எழுதியிருக்கும் பாடலைப் பாருங்கள்.
தெறிக்கு மாஸ் - இது
கன்னா பின்னா மாஸ்...
 
பறக்குது பறக்குது மாஸ் - இது
பக்கா பக்கா மாஸ்...
 
சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரியாணியில் விட்டதை வெங்கி இந்தப் படத்தில் பிடித்துவிடுவார் என்பதைப் போலிருக்கிறது பாடல்வரிகள். 
 
பட்டைய கிளப்புங்க பாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்