மருதுவிலும் ஒரு டண்டணக்கா...

சனி, 2 ஏப்ரல் 2016 (10:43 IST)
டி.இமான் இசையில் ரோமியோ ஜுலியட் படத்தில் அனிருத் பாடிய டண்டணக்கா பாடல் ஹிட்டானது.


 


இமானின் புதிய படம், மருதுவிலும் அனிருத்தை ஒரு பாடல் பாட வைத்துள்ளனர்.
 
குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா மருது படத்தை இயக்கியுள்ளார். நாயகி ஸ்ரீதிவ்யா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ஒரு பாடலை அனிருத்தை வைத்து பாட வைத்துள்ளனர். விஷால் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளார்.
 
டண்டணக்கா போன்று இந்தப் பாடலும் ஹிட்டாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்