புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் மனத்துணிச்சல் பிரமிக்க வைக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முடி கொட்டிப் போய், முறையான சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார், மம்தா மோகன்தாஸ்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் நார்மலாகி தற்போது பாபநாசத்திலும் நடித்தார், கௌதமி. மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யுஎஸ்ஸில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மோசமான நோய் ஆயிற்றே என்று முடங்கி நிற்காமல் அவரும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஷாம், அர்ஜுன், ரக்ஷா பட், மனிஷா கொய்ராலா நடிக்கும், ஒரு மெல்லிய கோடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று பாங்காக்கில் தொடங்கியுள்ளது. இங்கு இரு பாடல்களை எடுப்பதாக திட்டம். இரண்டில் ஒன்றில் மனிஷா கொய்ராலா ஷாமுடன் நடிக்கிறார். முதலில் இவர்களின் பாடல்தான் படமாக்கப்படுகிறது.