தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென தனி பாணியை கொண்டிருப்பவர் மணிரத்னம். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. கடைசியாக “செக்க சிவந்த வானம்” திரைப்படத்தை முடித்த பின்னர் பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிக, நடிகையரை தேர்வு செய்யும் பணியில் இறங்கினார். பல முக்கியமான நடிகர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதியாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், அமலாபால் உள்ளிட்ட ஒரு நடிக பட்டாளமே ஒப்பந்தமாகி உள்ளனர்.
மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானே இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பழம் தமிழ் எழுத்துக்களை இந்நளைய மக்களுக்கும் புரியும் வகையில் பாடல்வரிகளாக மாற்றி எழுத போவதாக தெரிவித்துள்ளார். சரித்திர கால படம் என்பதால் பாடல்கள் நிறைய இருக்கும் என கூறப்படுகிறது.