ஓகே கண்மணி மணிரத்னத்தின் குழந்தை

வியாழன், 29 ஜனவரி 2015 (13:10 IST)
வழக்கம்போல பூஜை இல்லாமல் போஸ்டரடிக்காமல் பேட்டி தராமல் தனது புதிய படம் ஓகே கண்மணியை தொடங்கி இறுதிக்கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளார் மணிரத்னம்.
பொதுவாக அவரது படங்கள் குறித்து வைரமுத்துதான் குறிப்புகள் தருவார். இந்தமுறை சோர்ந்துவிட்டார் போலிருக்கிறது. வைரமுத்துவின் இடத்தை பி.சி.ஸ்ரீராம் பிடித்துக் கொண்டுள்ளார்.
 
ஓகே கண்மணிக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் பி.சி.யின் ட்விட்டர் மூலமாகதான் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் ஹீரோயின் நித்யா மேனன், படத்தின் பெயர் ஓகே கண்மணி என பல விவரங்கள் தெரிய வந்தன. தனது சமீபத்திய ட்விட்டில், ஓகே கண்மணி மணியின் குழந்தை என்று குறிப்பிட்டிருப்பவர், படம் ஏப்ரலில் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்