மணிரத்னத்தின் அடுத்தப் படம் எதிர்க்கட்சி...?

திங்கள், 21 நவம்பர் 2016 (11:27 IST)
காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பை இறுதிகட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் மணிரத்னம். அவரது அடுத்தப் படம் குறித்த வதந்திகளும் மெல்ல பரவ ஆரம்பித்துள்ளன.


 

மணிரத்னம், எதிர்க்கட்சி என்ற பெயரில் அரசியல் படம் ஒன்றை இயக்க ரொம்ப நாள்களாக திட்டமிட்டுள்ளார். அவரது அடுத்தப் படம் அதுவாகவே இருக்கும் என்கிறார்கள். அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அதர்வா நடிப்பார் என்றும் கூறுகின்றனர்.

உண்மையா என்பதை கவிப்பேரரசு வைரமுத்து விளக்கினால்தான் உண்டு. மணிரத்னம் படம் குறித்த செய்திகளை அவர்தானே அவ்வப்போது வெளியிடுகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்