வரலட்சுமியை ஏமாற்றிய மம்முட்டி

புதன், 8 ஜூன் 2016 (17:00 IST)
தலைப்பை படித்துவிட்டு தாறுமாறாக கற்பனையை செலுத்த வேண்டாம். 


 
 
மம்முட்டிக்கு வயது 65. ஆனால், இன்றும் பொலிவு குறையாத தோற்றத்துடன் இளைஞனைப் போலவே வலம் வருகிறார். அவரிடம் இளமையின் ரகசியம் குறித்து கேட்காதவர்கள் குறைவு.
 
மம்முட்டியுடன் கசாபா படத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார். அவரும் மம்முட்டியிடம் இளமையின் ரகசியம் குறித்து கேட்டுள்ளார். மம்முட்டி என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?
 
இளமையின் ரகசியத்தை பற்றி கேட்கிறீர்கள். ரகசியம் என்பதே யாரிடமும் சொல்லாமல் இருப்பதுதான். 
 
சொல்லிவிட்டால் ரகசியத்துக்கு ஏது மரியாதை. அதனால், அது ரகசியமாகவே இருக்கட்டும் என்றிருக்கிறார்.
 
மம்முட்டியின் பேச்சுகூட இளமையாத்தான் இருக்கு.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்