தமிழுக்கு வரும் தேசிய விருது பெற்ற மலையாள நடிகர்

செவ்வாய், 26 ஜனவரி 2016 (14:54 IST)
மலையாளத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார்.


 
 
பாலக்காட்டு மாதவன் படத்தை இயக்கிய சந்திரமோஹன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம், கொஞ்சம் நடிங்க பாஸ். வேலை செய்தவனின் வியர்வை காயும் முன்பு அவனுக்கு கூலி தர வேண்டும் என்பதே தமிழர் பண்பாடு. ஆனால், ஒரு தயாரிப்பாளர் 4 இளைஞர்களை கூலியே தராமல் வேலை வாங்கப் பார்ப்பதுதான், கொஞ்சம் நடிங்க பாஸ் படத்தின் கதை.
 
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கிறார். 
 
இவர் நடிக்கும் முதல் படம் இது. சுராஜ் நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்