தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்காகவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் அவருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வைரல் ஆகின.