இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சுஜாவின் நடவடிக்கைகள் ஓவியா போல இருப்பதாக சில விமர்சனங்கள் அவரிடம் நேரடியாக வைக்கப்பட்டன. பின் நிகழ்ச்சியில் சினேகனுக்கும் சுஜாக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா மிகவும் கொஞ்சிக் குழைந்து பேசுவதும், பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தார். பல நேரங்களில் கலங்கி அழுதிருக்கிறார். பிறகு நிகழ்ச்சி முடிவடைவதற்கு சிலநாட்கள் முன்னதாக எலிமினேட் ஆனார்.