அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கியுள்ள இயக்குனர் மகிழ்திருமேனி, தான் விஜய்க்கு கதை சொன்னது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, ப்ரொமோஷன் வேலைகள் களைகட்டி வருகின்றன.
இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மகிழ்திருமேனி தான் விஜய்க்கு கதை சொன்ன அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் “நடிகர் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அவரிடம் மூன்று கதைகளை சொன்னேன். அதை கேட்ட அவர் நீங்கள் என்னை குழப்பி விட்டீர்கள் என்றார். மூன்று கதைகளில் ஒன்றை தேர்வு செய்து, எந்த படம் செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார். அவர் கூறியதை நான் என்றும் மறக்க மாட்டேன். விஜய்யின் தற்போதைய நிலைக்கும் பொருந்தக் கூடிய கதைகள் அவை” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K