துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்காக லைகா நிறுவனம் பிரபல திரைப்பட பைனான்சியர் மதுரை அன்புச் செழியனிடம் கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்துக்கும் அன்புச் செழியனுக்கும் நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்த போது பிரச்சனை எழுந்தது தமிழ் திரையுலகம் அறியும். அதனால் இப்போது அஜித் படத்துக்கு மதுரை அன்புச்செழியன் பைனான்ஸ் செய்ய உள்ளதாக ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.