‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுதது அவர் தமிழில் ‘கவண்’, ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை படைத்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ஆனால், அந்தப்புகைப்படங்களை கலெக்ட் செய்து லேடி சத்யராஜ் என்று சில மீம்களை உருவாக்கி தெறிக்கவிட்டனர் நெட்டிசன்ஸ்.