முடிந்தது இறுதிச் சுற்று - தாடி, மீசையை எடுத்த மாதவன்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (14:18 IST)
வேட்டைக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம் இறுதிச் சுற்று. பாக்சிங்கை மையப்படுத்திய இந்தப் படத்துக்காக      உடல்எடையை   அதிகரித்து,  மசிலை முறுக்கி,  பாக்சிங்கும் கற்றுக் கொண்டார்.
 
இறுதிச் சுற்று ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் தயாராகியுள்ளது. கடைசிக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில். அதுவும் முடிந்து படத்துக்காக வளர்த்த தாடி மீசையை மழித்து மீண்டும் பளபள மாதவனாக மாறியுள்ளார்.
 
இந்த புதிய அமுல்பேபி கெட்டப் தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகத்துக்காக. ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்