நடிகர் மாதவன் சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர தினம், ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி ஆவிட்டம் ஆகியவற்றை முன்னிட்டு தனது வீட்டில் நடந்த் பூஜையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர், அவன் மகன் மற்றும் தந்தை ஆகியோர் அமர்ந்திருந்தனர். அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள பூஜை அறையில் இந்து கடவுள்களோடு சிலுவை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
அவருக்குப் பதிலளித்த மாதவன் ‘நான் உங்களிடம் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். நான் தர்கா மற்றும் தேவாலயங்களுக்கும் சென்று ஆசிர்வாதம் பெற்று வருவேன். நான் சிறுவயதிலிருந்தே எனது அடையாளத்தை பெருமையாகவும் அதே நேரத்தில் மற்ற மதங்கள் மேல் மரியாதை செலுத்தும்விதமாகவும் வளர்க்கப்பட்டுள்ளேன். எனக்கு எம்மதமும் சம்மதம்’ எனத் தெரிவித்துள்ளார்.