எனக்கு மட்டும் ஏன் பெரிய டயலாக் கொடுத்தீங்க...? அலைபாயுதே பற்றி கேட்ட மாதவன்..!

புதன், 15 ஏப்ரல் 2020 (17:39 IST)
கொரோனா காரணமாக மொத்த உலகமும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் ரசிகர்களுடன் சமூகவலைதளங்களின் மூலம் உரையாடி வருகின்றனர்.  இதையடுத்து மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னத்திடம் ரசிகர்கள் கேட்கவேண்டிய கேள்விகளை தங்களது சுய அறிமுகத்தோடு வீடியோவாக எடுத்து அனுப்பினால் அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என தெரிவித்திருந்தார். அந்த கேள்விகளுக்கும் மணிரத்னம் அளிக்கும் பதில் நேற்று மாலை வெளியானது.

அப்போது நடிகர் மாதவன் மணிரத்னத்திடம், பெரும்பாலும் உங்கள் படத்தில் வரும் வசனங்கள் மிக பிரபலம் குறிப்பாக நாயகன் படத்தில் இடம்பெற்ற "நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா" என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு அவ்வளவு அழுத்தமான இருக்கும். ஆனால், வசனங்கள் நீளமாக இருக்காது. அப்படியிருக்க ஏன் என்னுடைய படத்தில் மட்டும் இவ்வளவு பெரிய வசனம் "சக்தி..  நான் உன்ன விரும்பல... உன் மேல ஆசை படல... நீ அழகா இருக்கேன்னு நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கும் என்ற இந்த வசனம் மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக பேச வைத்தீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மணிரத்னம் "நான் இயக்கிய இருவர் படத்தை நீ பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், அலைபாயுதே படத்தின் அந்த குறிப்பிட்ட காட்சியில் இருந்த அந்த இரண்டு ரயிலும் சில மணித்துளிகளில்  கிளம்பிவிடும் என்பதால் அந்த காட்சியை நான் ஒரே டேக்கில் எடுக்கவேண்டும் என்று  நினைத்தேன் என மணிரத்தினம் கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்