சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த பூமகள் ஊர்வலம் ராசு மதுரவனின் முதல் படம். பிரசாந்த், ரம்பா நடித்திருந்த அந்தப் படத்தை முப்பதுக்கும் குறைவான நாட்களில் அவர் எடுத்ததால் சூப்பர்குட் பிலிம்ஸே அவருக்கு அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது. துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் இயக்குனர் ராசு மதுரவன் இறந்து விட்டதால் இப்போது அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இயக்குனர் பி ஜெகன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிற்து.