மாரி படத்தில் நிற்கும் போது அடிக்கும் போது நடக்கும் போது என்று எப்போதும் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. கதைக்கு, காட்சிக்கு தேவைப்பட்டு சிகரெட் புகைப்பது என்பது வேறு. ஹீரோயிசத்துக்காக ஸ்டைலாக சிகரெட் புகைப்பது வேறு. இதில் இரண்டாவதைதான் படம் முழுக்க தனுஷ் செய்திருக்கிறார்.