‘டாக்டர்’ பட வசூலை முந்தியது ‘மாநாடு’ முதல் நாள் வசூல்

வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:57 IST)
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்ற நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூலை நேற்று வெளியான சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பல்வேறு பிரச்சனைகளை தாண்டி நேற்று சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டாக்டர் படத்தின் முதல் நாள் வசூலை விட பல லட்சங்கள் அதிகமாக ‘மாநாடு’ படத்தின் வசூல் செய்துள்ளதாகவும் சரியான வசூல் குறித்த தகவல் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களில் அண்ணாத்த, மாஸ்டர், கர்ணன், மாநாடு, ‘டாக்டர்’ ஆகிய திரைப்படங்கள் முதல் நாளில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்