பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்க ..!
சனி, 5 ஜனவரி 2019 (13:48 IST)
ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதால் துணி மற்றும் பேப்பர் பைகளை கடைகளில் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
இதனை அறிவித்த ஓரிருமணி நேரத்திலே சென்னையில் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பிளாஸ்டிக் பைகளை நிறுத்திவிட்டு . வீட்டில் இருந்து பைகளை கொண்டு வருமாறு அறிவுறுத்துகின்றனர். அல்லது அவர்களாகவே துணிப்பையை வழங்கி அதற்கு பத்து முதல் 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாறாக பேப்பர் பை, துணிப்பை, பாக்கு மட்டை பை , வாழை மட்டைகளால் ஆனா பைகள் போன்று வித விதமான இறக்கையை சார்ந்த எளிதில் மட்கக்கூடிய பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதனால் பேப்பர் பை, துணிப்பை போன்ற பைகளின் தேவைகளும் அதிகரித்ததோடு அதன் விலையும் இருமடங்காக கூடிவிட்டது.
இந்நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்ட துணிப்பைகளை இலவசமாக கடைகளில் கொடுத்து மக்களை பயன்படுத்த சொல்கின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த சமூக சேவையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.