லிங்கா நஷ்டம் - சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திங்கள், 22 டிசம்பர் 2014 (14:44 IST)
லிங்கா படத்தால் பலகோடி நஷ்டம், ரஜினியிடம் அதனை தெரிவிக்கப் போகிறோம் என சில விநியோகஸ்தர்கள் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தனர். இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்திலிருந்து ரஜினியின் வீடுவரை ஊர்வலம் செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த ஊர்வலப் போராட்டம் வேந்தர் மூவிஸுடனான சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைவிடப்பட்டது.
 
லிங்கா முதல் மூன்று தினங்கள் மிகப்பெரிய வசூலை பெற்றது. வார நாள்களில் வசூலில் பின்னடைவு ஏற்பட்டது. 'பரீட்சை காரணமாக ஏற்பட்ட பின்னடைவுதான் இது. வெள்ளிக்கிழமையில் இருந்து குடும்பம் குடும்பமாக லிங்காவை பார்க்க மக்கள் வருவார்கள்' என வேந்தர் மூவிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்மஸுக்குள் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் போட்ட பணம் திரும்பிவிடும் என்று வேந்தர் மூவிஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் விநியோகஸ்தர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்