தெலுங்கில் தடுமாறும் லிங்கா - அசலை எடுப்பதே கஷ்டம்

திங்கள், 15 டிசம்பர் 2014 (08:46 IST)
ரஜினி படங்கள் நேரடி தெலுங்குப் படங்களைப் போல் ஆந்திராவில் ஓடும். எந்திரன் அப்படிதான் ஓடி கலெக்ஷனை அள்ளியது. ஆனால் லிங்கா முதல்நாளிலிருந்தே தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிங்காவின் தெலுங்கு உரிமை சுமாராக 30 கோடிகளுக்கு விலைபோனது. இது எந்திரனைவிட அதிகம். படம் வெளியான முதல்நாள் ஆந்திரா முழுவதும் சேர்த்து 4 கோடியையே படம் வசூலித்துள்ளது. படம் சரியில்லை என்ற விமர்சனம் காரணமாக இரண்டாவது நாளிலிருந்தே கூட்டம் குறையத் தொடங்கியது. வார நாட்களில் வசூல் இன்னும் மோசமடையும் என்பதால் அசலையாவது படம் எடுக்குமா என்ற நிலைக்கு படத்தை வாங்கியவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
மற்ற தமிழ் நடிகர்களின் படங்களைவிட மிக அதிகம்தான் லிங்கா வசூலித்துள்ளது. ஆனாலும் அதற்கு தரப்பட்டது மிகமிக அதிக விலை என்பதால் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்