லிங்கா பிரச்சனை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்

புதன், 3 ஜூன் 2015 (10:46 IST)
லிங்கா பிரச்சனை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என விறியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார். ரஜினி தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் நிலையில், லிங்கா பிரச்சனையை விரைவாக முடிக்க நினைக்கிறார். இது தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம், தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சுப்பிரமணியம், நஷ்டமடைந்தவர்களுக்கு 12.5 கோடி வழங்குவதாக முடிவாகி, தயாரிப்பாளர் 6.24 கோடியை தந்தார். அது முறைப்படி செட்டில் செய்யப்பட்டுவிட்டது. தயாரிப்பாளர் தனது வீட்டு திருமணத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் மீதி பணத்தை இரண்டொரு நாளில் தந்துவிடுவார். அத்துடன் லிங்கா பிரச்சனை முடிந்துவிடும் என்றார்.
 
ரஜினி படம் நடித்துத்தர வேண்டும் என சிலர் கேட்பது பற்றி கேட்டதற்கு, ரஜினி படம் நடித்து தருவார் என எப்போதுமே சொன்னதில்லை. இல்லை என்பவர்கள் ஆதாரத்தை வெளியிடட்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்