சின்ன சிராய்ப்புகூட இல்லை- க்ளீன் யு சான்றிதழுடன் வெளிவரும் லிங்கா

புதன், 26 நவம்பர் 2014 (12:33 IST)
சின்ன கட்கூட இல்லாமல் க்ளீன் யு சான்றிதழுடன் வெளிவரவிருக்கிறது லிங்கா.
 
லிங்காவின் கதை தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தியது. சரியாகச் சொன்னால் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பிரச்சனையே தண்ணீர்தான். அதனால் சென்சார் என்னவிதமாக படத்தை அணுகும் என்ற கேள்வி இருந்தது.
மேலும், படத்தில் நீதித்துறையையும், வக்கீல்களையும் அவமரியாதையாக சித்தரித்து காட்சிகளும், வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்கிவிட்டே படத்தை தணிக்கை செய்ய வேண்டும் என வக்கீல் ஒருவர் தணிக்கைக்குழுவுக்கு புகாரும் தந்திருந்தார்.
 
ஆனால் அவற்றையெல்லாம் சருகாக கடந்து யு சான்றிதழுடன் லிங்கா வெளியாகவிருக்கிறது. படத்தின் சின்ன வசனத்துக்குக்கூட சென்சார் ஆட்சேபணை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
 
ஆக, டிசம்பர் 12 லிங்காவை குடும்பத்துடன் திரையரங்கில் ரசிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்