லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில் மட்டும் 200 -க்கும் அதிகமான திரையரங்குகள்

புதன், 19 நவம்பர் 2014 (10:51 IST)
லிங்கா டிசம்பர் 12 வெளியாவது உறுதிபட்டிருக்கும் நிலையில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
லிங்காவின் ஒட்டு மொத்த வெளிநாட்டு உரிமையை அருண்பாண்டியனின் ஏ அண்ட் பி குரூப்ஸும், ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும் வாங்கியிருந்தது.
 
இந்நிலையில் புதிதாக வந்திருக்கும் செய்தி யுஎஸ்ஸில் உள்ள ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும். யுஎஸ்ஸின் பிரபல கிளாஸிக் என்டர்டெய்ன்மெண்ட் லிங்காவை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள திரையரங்குகளில் லிங்காவை பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 
 
கோச்சடையான் யுஎஸ்ஸில் 104 திரையரங்குகளில் வெளியானது. ஏறக்குறைய அதைவிட ஒரு மடங்கு அதிக திரையரங்குகளில் லிங்காவை வெளியிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்