வெளிநாடுகளில் லிங்கா வசூல் - யுஎஸ்ஸில் 3 நாளில் எட்டு கோடிகள்

செவ்வாய், 16 டிசம்பர் 2014 (09:15 IST)
லிங்கா வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவிக்கிறது.
யுஎஸ்ஸில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 135 திரையிடல்களில் 1,336,406 யுஎஸ் டாலர்களை தனதாக்கியுள்ளது. இந்திய ரூபாயில் சுமாராக 8.41 கோடிகள்.
 
தமிழ்ப் படம் ஒன்று இவ்வளவு பிரமாண்ட ஓபனிங்கை யுஎஸ்ஸில் பெற்றிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரம் பல தெலுங்குப் படங்கள் முதல் மூன்று நாள் ஓபனிங்கில் இதைவிட அதிகம் வசூலித்திருப்பது முக்கியமானது.
 
யுகேயில் லிங்கா 36 திரையிடல்களில் 171,068 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் 1.68 கோடி.
 
மலேசியாவில் 36 திரையிடல்களில் 2.26 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. 
 
வெளிநாடுகளைப் பொறுத்தவரை யுஎஸ்ஸில் மட்டுமே லிங்கா மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்