கொரியா, சைனா, ரஷ்யா, வியட்நாம்.... இவையெல்லாம் லிங்கா வெளியாகப் போகிற நாடுகள்

வியாழன், 16 அக்டோபர் 2014 (10:20 IST)
நாள்கள் நெருங்க நெருங்க லிங்கா படத்தின் மீதான எதிர்பார்ப்பு சூடு வைத்த மீட்டராக அதிகரித்து வருகிறது. படத்தின் வெளிநாட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. வாங்கியவர்கள் நடிகர் அருண் பாண்டியனின் ஏ அண்ட் பி குரூப்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல்ஸ்.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெளிநாடுகளில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளனராம். யுஎஸ், யுகே இரண்டும் சேர்த்து அதிகபட்சம் 250 திரையரங்குகளில் படம் வெளியாகும். மலேசியா, கனடா, சிங்கப்பூரையும் சேர்த்தால் அதிகபட்சம் 500 வரும். இவர்கள் சொல்லும் ஆயிரம் எப்படி சாத்தியம்?
 
கேட்டால், முதல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றை - அதாவது லிங்காவை கொரியா, சைனா, வியட்நாம், ரஷ்யா, உக்ரைன் போன்ற வெளிநாடுகளிலும் திரையிடப் போகிறார்களாம். இங்கெல்லாம் ஆங்கில சப் டைட்டிலுடன் லிங்கா வெளியிடப்படும்.
 
லிங்காவை ராக் லைன் வெங்கடேஷ் தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். படம் டிசம்பர் 12 திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்