லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (16:58 IST)
லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது. 


 
 
ராக் லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினி இரு வேடங்களில் நடித்து வரும் படம், லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா இருவரும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். ரஹ்மான் இசை. தற்போது படப்பிடிப்பு கர்னாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் நடந்து வருகிறது.
 
லிங்காவின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இன்று - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடுவதாக ராக் லைன் வெங்கடேஷ் கூறியிருந்தார். சொன்னபடி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
 
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்