படம் வெளியாகலைன்னா என்ன... பர்ஸ்ட் லுக்காவது வெளியிடுவோம் என்ற ஆவேசத்தில் இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள். இப்படி போஸ்டர், பர்ஸ்ட் லுக் என்று அவ்வப்போது தீனி போடவில்லை என்றால், அஜித் ரசிகர்களைப் போல் துக்க தீபாவளி போஸ்டர் ஒட்டிவிடுவார்கள்.
சூர்யா நடித்த படம் எதுவும் தீபாவளிக்கு இல்லை. அதனால், வரப்போகிற எஸ் 3 படத்தின் மோஷன் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிடுகின்றனர். விஜய் படமும் இந்த தீபாவளிக்கு இல்லை. அதனால் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் பைரவாவின் டீசர் மற்றும் ஒரு பாடலை தீபாவளிக்கு வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.