என் தந்தை மீது சுமத்தப்படும் பழிகள், சட்டரீதியாக பதிவாகட்டும்: கபிலன் வைரமுத்து

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (10:28 IST)
என் தந்தை வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகள், சட்டரீதியாக பதிவாகட்டும் என கபிலன் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கவிஞர் வைரமுத்து மீது, திரைப்பட பின்னணி பாடகி சின்மயி மீடூ ஹேஸ்டேக் மூலம் டுவிட்டரில் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை மறுத்து வைரமுத்து வீடியோ மூலம் விளக்கமளித்தார்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அவரது மகன் கபிலன் வைரமுத்து தந்தை மீதான புகாரை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில், "வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குபடுத்துபவர்கள் அனுதாபத்துகுரியவர்கள். இந்த பிரச்னையை ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்னைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்