ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி, காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 மூன்றும் வெற்றியடைய கோவை சரளாவின் காமெடியும் ஒரு காரணம். இந்தப் படங்களில் பேயை கண்டு பயணப்படாதவர்களும் கோவை சரளாவின் நகைச்சுவைக்கு வாய்விட்டு சிரித்தனர்.
ஆகவே, நான் இயக்கும் படத்தில் அவருக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு வழங்கி, அவரை கோவை தமிழ் பேசி நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதனாலேயே, எனது மூன்று படங்களிலும் அவரை நடிக்க வைத்தேன். இந்த முனி, இனி எத்தனை பாகம் சென்றாலும், அவர் அதில் தொடர்ந்து நடிப்பார்" என்று கூறினார்.