ஒருபக்கம் லட்சுமி மேனன், மறுபக்கம் ஷாம்லி...?

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (16:38 IST)
துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷுக்கு இரண்டு வேடங்கள். அண்ணன் தம்பியாக நடிப்பதாக தகவல்.


 
 
அண்ணனுக்கு வித்யா பாலனை ஜோ‌டியாக்க முயன்று, அது திருவினையாகாமல் லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.
 
தம்பிக்கு யார் ஜோ‌டி? அண்ணனுக்க லட்சுமி மேனன் என்ற பிளஸ் டூ ஸ்டுடண்ட் என்றால் தம்பிக்கு இன்னும் இளமையாக வேண்டுமே? நமக்குக் கிடைத்த தகவல், ஷாலினியின் தங்கை ஷாம்லியை தம்பி தனுஷுக்கு ஜோ‌டியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 
 
விக்ரம் பிரபு ஜோ‌டியாக வீர சிவாஜி படத்தில் ஷாம்லி நடிப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. ஷாம்லி முதலில் யார் ஜோ‌டியாகப் போகிறhர் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்