அஜீத்துக்காக வேதாளம் படத்தில் நடிக்கவில்லை: லட்சுமிமேனன்

திங்கள், 8 பிப்ரவரி 2016 (14:05 IST)
அஜீத் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் வேதாளம். சிவா இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


 

இந்த படத்தில் அஜீத்திற்கு தங்கையாக நடிகை லட்சுமிமேனன் நடித்திருந்தார். முன்னனி கதாநாயகியாக வலம் வந்த அவர் திடீரென தங்கை வேடத்தில் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. அஜீத்துக்காக அவர் நடித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.ஆனால் அவ்வாறு இல்லை என லட்சுமி மேனன் தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

அஜீத்துக்காக நான் வேதாளம் படத்தில் தங்கையாக நடிக்கவில்லை. அந்த படத்தின் கதை பிடித்திருந்ததால்தான் நடித்தேன். இந்த படத்தின் முழுக்கதையையும் அஜித் சாரிடம்கூட இயக்குனர் சிவா கூறவில்லை. ஆனால் என்னிடம் முழுக்கதையையும் கூறினார். மேலும் அந்த படத்தில் என்னுடைய கேரக்டர் முக்கிய திருப்புனையை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனல்தான் சம்மதித்தேன் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்