லாபம் ’’பட அடுத்த சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:40 IST)
விஜய்சேதுபதியின் ’லாபம்’ படத்தின் 2- வது சிங்கில் ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆண்டு மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படத்தை அடுத்து தற்போது இருவரது கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிவாகியுள்ளது. இப்படத்திற்கு லாபம் என்ற பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, உத்தரன்,ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டி. இமான் இசைமயமைத்துள்ளார்.

இப்படத்தை விஜய்சேதுபதி புரொடெக்சன்ஸ் மற்றும் இயக்குநர் 7.சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் டிரெயிலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் யாழா யாழா  என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.
டி.இமானின் இசையில் உருவாகியுள்ள 2 வது சிங்கில் ரிலீஸ் தேதியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,நாளை மாலை 6 மணிக்கு லாபம் படத்தின் 2 வது சிங்கில் ரிலீசாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இப்பாடல் இப்படத்தின் இயக்குநர் மறைந்த எஸ்.பி.  ஜனநாதனுக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்