இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வான தமிழ்ப் படம் குற்றம் கடிதல்

ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (16:16 IST)
கோவாவில் வருடந்தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா முக்கியமானது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் சிறந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படும். சென்ற வருடம் தங்கமீன்கள் படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. 

 
இந்த வருடம் இந்தியா முழுவதிலுமிருந்தும் 181 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிட அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 26 திரைப்படங்கள் மட்டுமே தேர்வாயின. தமிழிலிருந்து ஒரேயொரு படமே - குற்றம் கடிதல் - தேர்வானது.
 
இந்தப் படத்தை ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் தயாரித்திருந்தார்.  படத்தை இயக்கியவர் பிரம்மா. குழந்தைகளைப் பற்றிய படம் இது.
 
இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்