பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 -ஆம் தேதியே ஐ வெளியாகிறது. ஜனவரி 14 என்னை அறிந்தால். இந்த இரு படங்களுக்கே தியேட்டர் கிடைக்குமா என்ற நிலையில் ஆம்பள, காக்கி சட்டை, கொம்பன் என மூன்று படங்கள் பொங்கலை குறி வைக்கின்றன.
ஆம்பள படத்தை ஆரம்பிக்கும் போதே பொங்கலுக்கு படம் வெளிவரும் என்று அறிவித்தார் விஷால். இதேபோல் தொடங்கும் போதே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நான் சிகப்பு மனிதன், பூஜை படங்கள் அதே தேதியில் வெளியாயின. ஆம்பள படத்தையும் அப்படி வெளியிட்டால் தயாரிப்பாளராக நஷ்டத்தை சந்திக்க நேரும் என்பது விஷாலுக்கு தெரிந்திருக்கிறது. பாடல் வெளியீட்டில் அதனை அவர் கோடிட்டு காட்டியதால் பொங்கலுக்கு ஆம்பள வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.