வருடந்தோறும் எண்ணிக்கையில் பெருத்துக் கொண்டே போகிறது தமிழ் சினிமா. சென்ற வருடம் வெளியான நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 160. இந்த வருடம் அக்டோபர் 22 தீபாவளிவரை வெளியான படங்கள்.... மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள், 167.
ஐ, லிங்கா, அனேகன், முனி 3, காக்கிச்சட்டை, ஜெய்ஹிந்த் 2, பூலோகம் போன்ற எதிர்பார்ப்புக்குரிய படங்களுடன் 100 -க்கும் மேற்பட்ட சின்ன பட்ஜெட் படங்களும் இந்த வருடம் ரிலீசாக உள்ளன.