சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கண்மணியை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா

திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:14 IST)
4. நண்பேன்டா
சென்ற வார இறுதியில் நண்பேன்டா 6.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.3 கோடி.
 

3. கொம்பன்
சூப்பர்ஹிட் என்று கொண்டாடப்பட்ட கொம்பன் சென்ற வார இறுதியில் 10.07 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை அதன் சென்னை வசூல் 2.8 கோடிகள். இது காக்கி சட்டை, அனேகன் படங்களின் வசூலைவிட மிகக்குறைவு.

 

2. ஓ காதல் கண்மணி
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி கடந்த வெள்ளி வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 84.6 லட்சங்கள்.

 

1. காஞ்சனா 2
லாரன்சின் பேய்ப் படம் இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 1.31 கோடியை வசூலித்துள்ளது. கொம்பனைவிட நல்ல வசூல். 

வெப்துனியாவைப் படிக்கவும்