மீண்டும் தள்ளிப்போன கோச்சடையான் - மே 9 தான் வெளியாகிறதாம்

வியாழன், 10 ஏப்ரல் 2014 (11:12 IST)
அதிக ரிலீஸ் தேதிகளை அறிவித்த படங்களின் வரிசையில் இப்போதைக்கு கோச்சடையானுக்குதான் முதலிடம். மே 1 வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் மீண்டும் தள்ளிப் போகிறது.
Kochadaiyan
மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படம் 2012 தீபாவளிக்கே வெளியாகும் என அறிவித்தனர். அதன் பிறகு இதோ அதோ என்று ஒரு டஜன் ரிலீஸ் தேதிகள். கடைசியில் படத்தை தயாரித்த ஈரோஸ் நிறுவனம் ஏப்ரல் 11 படம் கண்டிப்பாக ரிலீஸ் என்றது. அதுவும் நடக்கவில்லை. மே 1 என்று அறிவித்தனர். 
 
அறிவிப்பு வெளியான பன்னிரெண்டு மணி நேரத்துக்குள் மீண்டும் படவெளியீடு ஒருவாரத்துக்கு தள்ளிப் போயுள்ளது. மே 9 தான் படம் வெளியாகுமாம்.
 
அன்றைக்காவது வருமா?
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்